கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம்


கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம்
x
தினத்தந்தி 26 March 2021 7:52 PM IST (Updated: 26 March 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.

கோவை

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா இன்று  பிரசாரம் மேற்கொண்டார்.

"வாத்தி கம்மிங்" பாடலுக்கு இளைஞர்கள் நடனமாட, வானதி சீனிவாசனும், நடிகை நமீதாவும் பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி வந்து, அந்த பாடலின் பிரபலமான நடன அசைவை காட்டினர்.

பிரசாரத்திற்கு உடன் வந்திருந்த அதிமுக முன்னாள் துணை மேயர் லீலாவதி உண்ணி மேளதாளங்களுக்கு ஏற்றபடி பா.ஜ.க மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் ஆடினார்.

இதனைதொடர்ந்து ராம்நகர் பகுதியில் பொது மக்கள் மத்தியில் பேசிய நடிகை நமீதா, 5 ஆண்டுகளாக மோடியின் திட்டங்களை இந்த தொகுதி முழுவதும்  கொண்டு சேர்த்தவர் வானதி சீனிவாசன்.  விழா காலங்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உடை எடுத்து கொடுத்து உதவி இருக்கின்றார் . இந்த தொகுதியில் நிற்கும் நம்பிக்கை  இல்லாத ஒருத்தரை நம்பி எப்படி ஓட்டு போடுவது? 

 இங்கேயே பிறந்து, வாழ்ந்து வரும் வானதி சீனிவாசனுக்கு  ஓட்டு போடுங்கள் என கேட்டுக் கொண்ட அவர்,வானதி சீனிவாசனை தேர்வு செய்தால் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் வீடு தேடி வரும் என கூறினார்.

இதனை தொடர்த்து பேசிய பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், நீங்கள் நமீதாவிடம் இருந்து ஒரு வார்த்தையை ஆவலாக எதிர்பார்த்து இருப்பீர்கள் என கூறிய அவர், அந்த வார்த்தையை சொல்லுங்கள் என நடிக்க  நமீதாவிடம் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மீண்டும் மைக்கை வாங்கிய நடிகை நமீதா "மச்சான்ஸ் " தாமரைக்கு ஓட்டு போடுங்க. தமிழ்நாட்டில் தாமரை மலரும் " என கூறி ஓட்டு கேட்டார். இதன் பின்னரும் பிரச்சார வாகனம் அந்த இடத்தில் இருந்து நகராமல் அதே இடத்தில் நின்றது. பின்னர் கட்சியினரை பார்த்து மைக்கில் பேசிய வானதி சீனிவாசன் "மெய் மறந்து நிற்காதீங்க. அடுத்து எங்க போகனும்  வழியை காட்டுங்கப்பா" என கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் கோவை தெற்கு தொகுதியின் பிற பகுதிகளுக்கு நடிகை நமீதா பிரசாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.


Next Story