"தங்க தமிழ்செல்வன் டெபாசிட் இழப்பார்" - போடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்


தங்க தமிழ்செல்வன் டெபாசிட் இழப்பார் - போடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
x
தினத்தந்தி 28 March 2021 10:35 AM IST (Updated: 28 March 2021 10:35 AM IST)
t-max-icont-min-icon

போடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் டெபாசிட் இழப்பார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

போடி,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அமமுக சார்பில் முத்துச்சாமி போட்டியிடுகிறார். அதேபோல், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கியுள்ளன. இதனால் போடி தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறியுள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

அதிமுக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உழைப்பால் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. ஆனார். இல்லையென்றால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது. அதையெல்லாம் மறந்து இன்றைக்கு அதிமுக-வுக்கு துரோகம் இழைத்த தங்க தமிழ்செல்வன் டெபாசிட் இழப்பார். அதுதான் அவருக்கு கொடுக்கக்கூடிய சரியான தண்டனை. மக்களை குழப்பி தேர்தலில்
வெற்றிபெறலாம் என்று திமுக நினைக்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது. தமிழக மக்கள் அறிவுப்பூர்வமானவர்கள் சிந்திக்கக்கூடியவர்கள். சிந்துத்து வாக்களிக்கக்கூடிய மக்கள் தமிழகத்தில் உள்ளனர். ஆகவே முக ஸ்டாலின் கனவு நிறைவேறாது’ என்றார்.

Next Story