திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு


திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
x
தினத்தந்தி 29 March 2021 11:36 AM IST (Updated: 29 March 2021 11:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழக்கப்பட்டு வருவதால் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியின் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

திருச்சுழி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி கூறி இத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கியதாக திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு மீதான புகார் மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதை தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர் திருப்பதி தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டது.

Next Story