ஓ.பன்னீர்செல்வம் தாயாரிடம் ஆசிபெற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்


ஓ.பன்னீர்செல்வம் தாயாரிடம் ஆசிபெற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 30 March 2021 9:26 PM GMT (Updated: 2021-03-31T02:56:07+05:30)

ஓ.பன்னீர்செல்வம் தாயாரிடம் ஆசிபெற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.

தேனி, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன் போடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் போடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்குசேகரித்தார். பின்னர் போடி சுப்புராஜ் நகரில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். பின்னர் வீட்டில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளின் காலில் விழுந்து எடப்பாடி பழனிசாமி ஆசி பெற்றார். அவருக்கு நெற்றியில் திருநீறு பூசிவிட்டு பழனியம்மாள் ஆசி வழங்கினார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் திருநீறு பூசிவிட்டு தேர்தலில் வெற்றிபெற வாழ்த்தினார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்களான ப.ரவீந்திரநாத் எம்.பி., வி.ப.ஜெயபிரதீப் மற்றும் குடும்பத்தினர் எடப்பாடி பழனிசாமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்களை அ.தி.மு.க.வினர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தாயாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆசி பெறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.Next Story