வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இளம் வாக்காளர்கள்
தேனி மாவட்டத்தில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இளம் வாக்காளர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
தேனி:
இளம் வாக்காளர்கள்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இளம் வாக்காளர்கள் உள்ளனர்.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 25 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 18 வயது முதல் 19 வயது வரையுள்ள புதிய வாக்காளர்கள் 24 ஆயிரத்து 851 பேர் உள்ளனர்.
மேலும் வயது வாரியாக 20 முதல் 29 வரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 915 பேர், 30 முதல் 39 வயது வரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 162 பேர், 40 முதல் 49 வயது வரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 11 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
வெற்றியை தீர்மானிப்பவர்கள்
50 வயது முதல் 59 வயது வரை 1 லட்சத்து 91 ஆயிரத்து 451 பேர், 60 முதல் 69 வயது வரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 671 பேர், 70 முதல் 79 வயது வரை 62 ஆயிரத்து 52 பேர், 80 வயதுக்கு மேல் 22 ஆயிரத்து 525 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
18 வயது முதல் 19 வயது வரையுள்ள புதிய வாக்காளர்களை பொறுத்தவரை ஆண்டிப்பட்டியில் 6,302 பேர், பெரியகுளத்தில் 6,497 பேர், போடியில் 6,436 பேர், கம்பத்தில் 5,616 பேர் உள்ளனர்.
20 வயது முதல் 29 வயது வரையுள்ள வாக்காளர்களாக ஆண்டிப்பட்டியில் 56,409 பேர், பெரியகுளத்தில் 58,476 பேர், போடியில் 55,367 பேர், கம்பத்தில் 54,663 பேர் என தொகுதி வாரியாக உள்ளனர்.
தேர்தலில் கடுமையான போட்டிகள் இருக்கும் என்பதால், இளம் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
இளம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் அவர்களை கவரும் வகையில் அரசியல் கட்சியினர் பிரசார யுக்திகளை கட்டமைத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பிரசாரத்தில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story