கோவை தெற்கு தொகுதியை, பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று பாதுகாப்பேன் - கமல்ஹாசன்


கோவை தெற்கு தொகுதியை, பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று பாதுகாப்பேன் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 1 April 2021 2:16 PM GMT (Updated: 1 April 2021 2:16 PM GMT)

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன. இதனால் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:-

கோவை தெற்கு தொகுதியை, பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று பாதுகாப்பேன். சினிமா டிக்கெட் விற்பனைக்கும், நற்பணி இயக்கங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நற்பணி இயக்கங்களை அரசியல் பணியில் அமர்த்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story