தமிழகத்தில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்
தமிழகத்தில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் தேர்தல் ஆணையம் புதிய தகவல்.
சென்னை,
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களை வயதிற்கு ஏற்ப பிரித்து புதிய தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 18 வயது முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்கள், 13 லட்சத்து 83 ஆயிரத்து 610 பேர் உள்ளனர். 20 - 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 94.
30 - 39 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 1 கோடியே 38 லட்சத்து 81 ஆயிரத்து 486. 40 - 49 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 1 கோடியே 32லட்சத்து 60 ஆயிரத்து 336. 50 - 59 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 1 கோடியே 3 லட்சத்து 28 ஆயிரத்து 443.
60 - 69 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 67 லட்சத்து 21 ஆயிரத்து 432.
70 - 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 35 லட்சத்து 26 ஆயிரத்து 97.
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 457 ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கையின்படி பார்க்கும்போது 18 முதல் 39 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 46 ஆயிரத்து 190 ஆக உள்ளது.
Related Tags :
Next Story