சொந்த ஊரில், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய துர்கா ஸ்டாலின்


சொந்த ஊரில், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய துர்கா ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 April 2021 9:54 PM GMT (Updated: 2021-04-02T03:24:05+05:30)

சொந்த ஊரில், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய துர்கா ஸ்டாலின் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.

திருவெண்காடு, 

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஆகும். நேற்று காலை திருவெண்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். கீழ வீதியில் உள்ள சர்வ சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வடபாதி, சின்ன பெருந்தோட்டம், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் சீர்காழி தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் பன்னீர்செல்வத்தை ஆதரித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து அல்லி மேடு, அகர பெருந்தோட்டம், பெருந்தோட்டம் ஆகிய இடங்களில் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். 

Next Story