தி.மு.க. தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப தயாராக இல்லை - ஜி.கே.வாசன் பேட்டி


தி.மு.க. தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப தயாராக இல்லை - ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 2 April 2021 5:26 PM GMT (Updated: 2 April 2021 5:26 PM GMT)

தி.மு.க. தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப தயாராக இல்லை என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் கூறினார்.

ஈரோடு, 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன. இதனால் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாநில கட்சி தலைவர்கள் முதல் தேசிய கட்சி தலைவர்கள் வரை தமிழக தேர்தல் களத்தில் தங்களது கட்சியின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்து ஈரோடு மாநகர் பகுதியில் இன்று பல்வேறு இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் (அதாவது நாளை) முடிவடைய உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றிவாய்ப்பு நாளுக்கு நாள் பிரகாசமாக இருக்கிறது. 

அ.தி.மு.க ஆட்சியாளர்களின் வளர்ச்சி திட்டங்களையும், சலுகைகளையும் தமிழக மக்கள் 100 சதவீதம் வரவேற்கிறார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை மக்கள் நம்புகிறார்கள். மாறாக தி.மு.க. தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப தயாராக இல்லை.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Next Story