ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு
ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறி மசூதி அருகே பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை தொடர்ந்து கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 143,188- ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை பொருத்தவரை மத வழிபாட்டு தலங்கள் முன்பு பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்பது விதியாகும்.
வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நின்றே பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிகளில் உள்ளது. இதை மீறி குஷ்பு மசூதி அருகே சென்று பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து குஷ்பு மற்றும் அவருடன் சென்ற நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story