தேர்தல் பார்வையாளர் ஆய்வு


தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 4 April 2021 4:22 PM GMT (Updated: 2021-04-04T21:52:35+05:30)

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுமலையில் பழையூர், புதூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதையொட்டி அந்த வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் பாபு சிங் ஜமோட் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

அவருடன் கிழக்கு தாசில்தார் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் வசந்த் ஆகியோர் இருந்தனர். 


Next Story