தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை 234 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை 234 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்களிக்காமல் ஒரு வாக்காளர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சில தொகுதிகளில் தேர்தல் செலவின பொறுப்பாளர்கள் சோதனையின் போது பணம் மற்றும் இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்படி, கொளத்தூர், திருச்சி மேற்கு, திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவிய நிலையில்ந்த தகவலில் உண்மையில்லை.
திட்டமிட்டபடி நாளை 234 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடத்துவற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
பதற்றமான மிகவும் பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story