துப்பாக்கி ஏந்திய துணை ராணுவவீரர்கள் பாதுகாப்பு


துப்பாக்கி ஏந்திய துணை ராணுவவீரர்கள் பாதுகாப்பு
x
தினத்தந்தி 5 April 2021 8:43 PM IST (Updated: 5 April 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 142 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்: 

பாதுகாப்பு ஏற்பாடுகள் 
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 

இந்த 7 தொகுதிகளிலும் 2 ஆயிரத்து 673 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

 மேலும் சட்டமன்ற தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடைபெறுவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.


இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து 9 கம்பெனிகளை சேர்ந்த 720 துணை ராணுவ வீரர்கள் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளனர். 

இவர்களுடன் ஆயுதப்படை போலீசார் உள்பட 1,850 போலீசார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் என மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 250 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு 
இவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் வாக்கு எண்ணும் மையத்துக்கு அவற்றை கொண்டு வருவதல், பிரச்சினைக்குரிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதிலும் குறிப்பாக மாவட்டம் முழுவதும் 142 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. 

இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் தலா 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுடன் 5 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


Next Story