இன்று வாக்களிக்க எந்த ஆவணங்களை எடுத்து போகலாம்?
வாக்களிக்க அடையாள சான்றாக 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த ஆவணங்கள் என்னென்ன விவரம் பின்வருமாறு:-
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான அடையாள சான்றாக 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த ஆவணங்கள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.
* வாக்காளர் அடையாள அட்டை.
* ஆதார் அட்டை.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை.
* வங்கி அல்லது தபால் நிலையங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்கு புத்தகங்கள்.
* மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு 'ஸ்மார்ட் அட்டை'.
* ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்சு).
* வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு).
* தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட 'ஸ்மார்ட் கார்டு'.
* பாஸ்போர்ட்
*புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
* பணியாளர் அடையாள அட்டை (மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள்).
* அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற, சட்டமன்ற, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது).
(வாக்காளர் பூத் சிலிப் வாக்குப்பதிவு மையங்களில் அடையாள சான்றாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது).
Related Tags :
Next Story