சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 6 April 2021 10:58 AM IST (Updated: 6 April 2021 10:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.

சென்னை

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர். 

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 

சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நேர நிலவரப்படி  13.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது

கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாக்களித்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பூ தனது வாக்கினை செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பூ, ‘ என் தொகுதியில் 4 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி உள்ளன. ஆனால் விரைவில் பழுது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக எப்போதும் விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை. நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம். 

சசிகலாவின் பெயர் வாக்காளர் படியலில் இருந்து நீக்கப்பட்டது, எதிர்பாராத ஒன்று. யார் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்பது ஏப்ரல் 2 ஆம் தேதி தெரியும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வாக்குப்பதிவின் போது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.’ என்று அவர் கூறினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.

Next Story