புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 62.32% வாக்குகள் பதிவு


புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 62.32% வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 3:59 PM IST (Updated: 6 April 2021 3:59 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், மதியம் 3 மணி நிலவரப்படி 62.32% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளிலுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 62.32% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதுச்சேரி - 63.63%,  காரைக்கால் - 55.48%,  மாஹே - 55.38%,  ஏனாம் - 72.26% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story