மே.வங்காளம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


மே.வங்காளம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
x
தினத்தந்தி 2 May 2021 8:01 AM IST (Updated: 2 May 2021 8:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

புதுடெல்லி,

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இன்று இரவுக்குள் முடிவுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதில் மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story