கொரோனா பாதிப்பு: கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றம்
கொரோனா பாதிப்பு காரணமாக கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை,
சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. அதே போல் புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு அலுவலர்களுக்கு மட்டுமே தபால் வாக்கு அளிக்கும் வசதி இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த முறை தபால் வாக்கு முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி 75 மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய அதிகாரியாக கண்ணன் அங்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story