சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102 இடங்களிலும் முன்னிலை


சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102 இடங்களிலும் முன்னிலை
x
தினத்தந்தி 2 May 2021 10:33 AM IST (Updated: 2 May 2021 10:33 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தல் திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன

சென்னை

234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.  தொடர்ந்து சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

திமுக 106 இடங்களிலும் காங்கிரஸ் 7, மதிமுக-2 , சிபிஎம்-3, சிபிஐ-2, விசிக-4, பிற 1 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

 அதிமுக 61 இடங்களிலும் பாமக 10, பாஜக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

* எடப்பாடி மூன்றாவது சுற்று முடிவில் முதல்வர் பழனிசாமி முன்னிலை!

* திருக்கோவிலூர் தொகுதி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் க.பொன்முடி முன்னிலை!

* கோவை தெற்கு தொகுதி முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் முன்னிலை!

* ராயபுரம் தொகுதி முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் பின்னடைவு!

* நாகபட்டினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி  வேட்பாளர் ஷாநவாஸ் முன்னிலை!

* ஆத்தூர் ( திண்டுக்கல் ) முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி முன்னிலை!

*  திருவண்ணாமலை தொகுதி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை! 

* ராஜபாளையத்தில் மூன்றாம் இடத்தில் நாம் தமிழர்! 

* மதுரை வடக்கு தொகுதி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் கோ.தளபதி முன்னிலை!

* ஈரோடு கிழக்கு தொகுதி முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா முன்னிலை!

* ராஜபாளையம் தொகுதி முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவு!

*  பல்லடம், நிலைக்கோட்டை தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி!

* காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன், குறிஞ்சிபாடி தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பின்னடைவு

* சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பின்னடைவு 

Next Story