கேரள சட்டசபை தேர்தல் முடிவுகள்: இடதுசாரி ஜனநாயக முன்னணி 97 இடங்களில் முன்னிலை


கேரள சட்டசபை தேர்தல் முடிவுகள்: இடதுசாரி ஜனநாயக முன்னணி  97 இடங்களில் முன்னிலை
x
தினத்தந்தி 2 May 2021 10:36 AM IST (Updated: 2 May 2021 10:36 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் 140 உறுப்பினர் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜனதா இடையே பலத்த போட்டி நிலவியது. இந்த கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 957 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது 11 மந்திரிசபை சகாக்கள், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, பா.ஜனதாவின் மெட்ரோமேன் ஸ்ரீதரன், மத்திய மந்திரி அல்போன்ஸ், மாநில தலைவர் சுரேந்திரன் என பல்வேறு தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை 2.03 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் நிர்ணயித்தனர்.இந்த வாக்குகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட்டு  வருகின்றன. 

இதில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் படி   இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி  இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இடதுசாரி ஜனநாயக முன்னணி, 97 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

Next Story