சட்டசபை தேர்தல் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 5 அமைச்சர்கள் பின்னடைவு
சட்டசபை தேர்தல் திமுக கூட்டணி 133 இடங்களிலும், அதிமுக கூட்டணி 99 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன
சென்னை
234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணி 133 இடங்களிலும், அதிமுக கூட்டணி 99 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
திமுக 106 இடங்களிலும் காங்கிரஸ் 7, மதிமுக-2 , சிபிஎம்-3, சிபிஐ-2, விசிக-4, பிற 1 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
அதிமுக 61 இடங்களிலும் பாமக 10, பாஜக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
* முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் டாக்டர் நா.எழிலன் மூர்த்தி முன்னிலை!
* சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியம் முன்னிலை
* திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக முன்னிலை!
4 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்திக்கின்றனர். தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1,900 வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.
ராயபுரத்தில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார், ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் பின்னடைவில் உள்ளனர்.
தற்போது போடி நாயக்கனூரில் ஓ.பன்னீர் செல்வம் பின்னடைவை சந்திக்கிறார்
Related Tags :
Next Story