தமிழக சட்டமன்ற தேர்தல்: தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் வி.ஐ.பி வேட்பாளர்கள்!


தமிழக சட்டமன்ற தேர்தல்: தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் வி.ஐ.பி வேட்பாளர்கள்!
x
தினத்தந்தி 2 May 2021 2:19 PM IST (Updated: 2 May 2021 2:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், வி.ஐ.பி வேட்பாளர்கள் பலர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சென்னை, 

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல வி.ஐ.பி வேட்பாளர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். 

இதன்படி காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் (36,056 வாக்குகள்) பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ராமு (41,357 வாக்குகள்) முன்னிலையில் உள்ளார்.

கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (25,209 வாக்குகள்) பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ (29,029 வாக்குகள்) முன்னிலையில் உள்ளார்.

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளாராக களமிறங்கிய அமைச்சர் ஜெயகுமார் (15,136 வாக்குகள்) பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி (23,769 வாக்குகள்) முன்னிலையில் உள்ளார்.

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா (15,780 வாக்குகள்) பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி (27,211 வாக்குகள்) முன்னிலையில் உள்ளார்.

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளாராக போட்டியிட்ட அமைச்சர் ராஜலெட்சுமி (20,486 வாக்குகள்) பின்தங்கியுள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் ஈ.ராஜா (24,307 வாக்குகள்) முன்னிலையில் உள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு (6,524 வாக்குகள்) பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் (16,386 வாக்குகள்) முன்னிலையில் உள்ளார். 

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் (17,030 வாக்குகள்) தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் (14,118 வாக்குகள்) பின்தங்கியுள்ளார்.

பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் (21,730 வாக்குகள்) பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் (22,372 வாக்குகள்) முன்னிலையில் உள்ளார்.

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் (11,969 வாக்குகள்) பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சங்கர் 24,902 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் குப்பன் 15,718 வாக்குகளும் பெற்று முன்னிலை பெற்றுள்ளனர்.

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் (10,896 வாக்குகள்) தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம்.ஆர் ராதாகிருஷ்ணன் 25,323 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஜே.கார்த்திகேயன் (22,050 வாக்குகள்) தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் ம.நீ.ம கட்சி வேட்பாளர் ஸ்ரீபிரியா (3,182 வாக்குகள்) தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நடராஜ் 13,426 வாக்குகளும், திமுக வேட்பாளர் வேலு 12,153 வாக்குகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

Next Story