சட்டசபை தேர்தல் : தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி


சட்டசபை தேர்தல் : தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 2 May 2021 8:58 AM GMT (Updated: 2021-05-02T14:28:53+05:30)

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.

சென்னை

 எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.அதிமுக வேட்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இதுவரை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 30,169 வாக்குகளை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சம்பத் குமார் 10,266 வாக்குகளை பெற்றுள்ளார்.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போது சுமார் 46,645 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கிச் செல்கிறார்.

Next Story