நாகை தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி


நாகை தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 1:10 PM GMT (Updated: 2021-05-02T18:40:54+05:30)

திமுக கூட்டணி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் நாகை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

நாகை,

தமிழகத்தில் இன்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 156 இடங்களிலும், அதிமுக 77 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.

அனைத்து தொகுதிகளிலும் பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ், அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை விட 7,238 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story