தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் - அமித்ஷா டுவிட்
5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 75 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனை தொடர்ந்து முக ஸ்டாலினுக்கும், திமுக கூட்டணியினருக்கும் நரேந்திர மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ள நிலையில் மத்திய உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், 5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழு மனதோடு சேவை ஆற்றியுள்ளது. மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பாரத பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன்’ என தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது. மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பாரத பிரதமர் @narendramodi தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன்.
— Amit Shah (@AmitShah) May 2, 2021
Related Tags :
Next Story