சட்டசபை தேர்தல் - 2021

மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா வெற்றி + "||" + DMK candidate TRB Raja wins Mannargudi constituency

மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா வெற்றி

மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா வெற்றி
திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
திருவாரூர்,

தமிழகத்தில் இன்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

அனைத்து தொகுதிகளிலும் பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா 37,614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.