காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜா பின்னடைவு


காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜா பின்னடைவு
x
தினத்தந்தி 2 May 2021 10:23 PM IST (Updated: 2 May 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.

சிவகங்கை,

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளில் முன்னிலையுடன் உள்ளது. இதனை தொடர்ந்து திமுக ஆட்சியமைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதற்கிடையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா போட்டியிட்டார். ஹெச்.ராஜாவை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி போட்டியிட்டார்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதில், பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். மொத்தமுள்ள 33 சுற்று வாக்கு எண்ணிக்கையில் 32 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. 

அதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 73 ஆயிரத்து 334 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஹெச். ராஜா 53 ஆயிரத்து 524 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதன் மூலம் காங்கரஸ் வேட்பாளரை விட பாஜகவின் ஹெச். ராஜா 19 ஆயிரத்து 810 வாக்குகள் பின் தங்கிய நிலையில் உள்ளார். இன்னும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையே எஞ்சியுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.     

Next Story