கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் கமல்ஹாசன் தோல்வி: வெற்றி பெற்றார் வானதி சீனிவாசன்


கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் கமல்ஹாசன் தோல்வி: வெற்றி பெற்றார் வானதி சீனிவாசன்
x
தினத்தந்தி 2 May 2021 5:02 PM GMT (Updated: 2 May 2021 5:02 PM GMT)

கோவைத்தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிப்பெற்றார்.

கோவை,

முன்னதாக தமிழகசட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணியானது இன்று நடைபெற்றது. பெரும்பான்மையான இடங்களில் திமுகக் கைப்பற்றி ஆட்சி அரியணையைக் கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில், கோவைத்தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் இன்று காலையில் இருந்தே முதலிடத்திலும், மயூரா ஜெயகுமார் இராண்டாம் இடத்திலும், வானதி சீனிவாசன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர். மதியத்திற்கு மேல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் வானதி சீனிவாசன். நீண்ட நேரம் கமல்ஹாசன் முதலிடத்தில் நீடித்து வந்த நிலையில், மாலை வேளைக்குப்பின் வானதி சீனிவாசன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்.

கடந்த சில மணி நேரங்களாக இருவருக்கும் இடையே மிகசிறிய அளவிலான வாக்குவித்தியாசம் நிலவிவந்த நிலையில் தற்போது வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். கமல்ஹாசன் 51, 481வாக்குகளையும், மயூரா ஜெயகுமார் 42, 383 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.

Next Story