தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநில நலனுக்காகவும், தமிழ் பண்பாட்டை பறைசாற்றவும் தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். கடினமாக உழைத்த தொண்டர்களை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story