சட்டசபை தேர்தலில் வெற்றி: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உத்தவ் தாக்கரே, சரத்பவார் வாழ்த்து


சட்டசபை தேர்தலில் வெற்றி: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உத்தவ் தாக்கரே, சரத்பவார் வாழ்த்து
x
தினத்தந்தி 2 May 2021 11:51 PM GMT (Updated: 2 May 2021 11:51 PM GMT)

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உத்தவ் தாக்கரே, சரத்பவார் வாழ்த்து கூறியுள்ளனர்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் எல்லாம் சிறப்பாக நடக்கவும் உங்களை வாழ்த்துகிறேன்’’ என கூறியுள்ளார்.

சரத்பவார்

இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘உங்களது வெற்றிக்கு வாழ்த்துகள் மு.க.ஸ்டாலின். உண்மையில் தகுதியான ஒரு வெற்றி. உங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு சிறந்த சேவையாற்ற உங்களை வாழ்த்துகிறேன்’’ என கூறியுள்ளார்.

Next Story