அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பாதி பேர் இந்தியர்கள் மற்றும் சீனர்கள்

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் 11.7 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் பாதி பேர் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் அந்தநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் 11.7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5.8 லட்சம் மாணவர்கள், அதாவது 49.5 சதவீதம் மாணவர்கள் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் 75 சதவீதம் மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்புகள் பயின்று வருகிறார்கள் என்றும், 11 சதவீதம் மாணவர்கள் இளநிலை படிப்புகளும் 10 சதவீதம் மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கும் பயின்று வருவதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவிலேயே பணியில் சேர விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






