பாகிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலில் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்


பாகிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலில் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்
x
தினத்தந்தி 11 May 2019 7:20 PM IST (Updated: 11 May 2019 7:20 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாபாமாத்,

பாகிஸ்தானில் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குள் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என பாகிஸ்தான் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நட்சத்திர ஹோட்டல் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டதாகவும், ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளதாக டான் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1 More update

Next Story