சுதந்திர தின கொண்டாட்டம் இந்தியாவுக்கு உலக நாடுகள் வாழ்த்து


சுதந்திர தின கொண்டாட்டம் இந்தியாவுக்கு உலக நாடுகள் வாழ்த்து
x
தினத்தந்தி 15 Aug 2019 8:15 PM GMT (Updated: 15 Aug 2019 8:15 PM GMT)

இந்திய சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வாஷிங்டன், 

இந்திய சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளன. இதில் அமெரிக்கா சார்பில் அந்த நாட்டு வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

அதில் அவர் கூறுகையில், ‘அமெரிக்க அரசு சார்பில் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 72 ஆண்டுகளுக்கு முன் இந்திய சுதந்திரத்துக்கு அமெரிக்கா உதவியதில் இருந்தே இரு நாடுகளும் நெருக்கமான நட்பை கொண்டிருக்கின்றன’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்கடிதம் அனுப்பி உள்ளார். அதில், உலக அரங்கில் இந்தியாவின் புகழ் மற்றும் பொருளாதாரம், அறிவியல், கலாசாரம் ஆகியவற்றில் இந்தியாவின் சாதனையை புதின் பாராட்டி இருந்ததாக கிரெம்ளின் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதைத்தவிர அண்டை நாடுகளான நேபாளம், மாலத்தீவு, பூடான் போன்ற நாடுகளின் தலைவர்களும் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

சுதந்திர தின வாழ்த்துக்கூறிய அனைத்து தலைவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.

Next Story