போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ள மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்


போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ள மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில்  நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:49 AM GMT (Updated: 13 Dec 2019 11:07 AM GMT)

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ள மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் இடம் பெற்று உள்ளார்.

நியூயார்க்

அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் 2019  உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் முதலிடம் பிடித்து உள்ளார். தொடர்ந்து 9-வது ஆண்டாக மேர்க்கெல் முதல் இடத்தில் உள்ளார். சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிதாக சேர்ந்து உள்ளார். மேலும் எச்.சி.எல். நிறுவன  தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா மற்றும் பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா ஆகியோரும்  இடம் பெற்றுள்ளனர்.

மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் புதியவரான நிர்மலா சீதாராமன் 34-வது இடத்தில் உள்ளார். வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா 29 வது இடத்தில் உள்ளார்.

நிதி அமைச்சக பொறுப்பை  தனி ஒருவராக  வைத்திருக்கும் முதல் பெண் நிர்மலா சீதாராமன். இதற்கு முன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நிதி அமைச்சக பொறுப்பை கூடுதல் பொறுப்பாக எடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த பட்டியலில் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 54-வது இடத்தில் உள்ளார். எச்.சி.எல். கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியாக, 8.9 பில்லியன் அமெரிக்க டாலர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான அனைத்து  முடிவுகளையும் அவரே எடுக்கிறார். இந்த பட்டியலில் 65 வது இடத்தில் மஜும்தார்-ஷா உள்ளார். 

பட்டியலில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் முதலிடத்திலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்திலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவர் மெலிண்டா கேட்ஸ் 6-வது இடத்திலும்,  ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டி 9-வது இடத்திலும்  பேஸ்புக் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க் 18 வது இடத்திலும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் 38 வது இடத்திலும் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் இவான்கா டிரம்ப் 42 வது இடத்தில் உள்ளார். பாடகர்கள் ரிஹானா 61 வது இடத்திலும்,  பியோனஸ் 66 வது இடத்திலும் மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட்71 வது இடத்திலும், டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 81 வது இடத்திலும்  டீனேஜ் காலநிலை ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் 100வது இடத்திலும் உள்ளார்.

Next Story