“3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய கொரோனா கட்டுக்குள் வந்தது” சீன சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு


“3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய கொரோனா கட்டுக்குள் வந்தது” சீன சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 12 March 2020 9:42 AM GMT (Updated: 12 March 2020 9:42 AM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெய்ஜிங்,

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். 

சீனாவில் மட்டும் கொரோனா வைரசால் 3042 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியா,  ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.  இதுவரை, 70க்கும் மேற்பட்ட நாடுகளில், 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி வருவதாக சீன சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் கூறியதாவது:-

கடந்த திங்கள் கிழமை நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 80,000-க்கும் மேற்பட்டவர்களில், 70 சதவிகித நோயாளிகள் வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Next Story