பிரேசிலில் ஒரே நாளில் 1500 பேர் பலி: உயிரிழப்பில் உலகில் 3-ம் இடம்
பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1500 பேர் பலியாகினர். மேலும் உயிரிழப்பில் பிரேசில் உலகில் 3-ம் இடத்தில் உள்ளது.
பிரேசிலியா,
கொரோனா வைரஸ் தொற்று, லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் சமீப காலமாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை அதன் அதிபர் ஜெயிர் போல்சொனரோ குறைத்து மதிப்பிட்டு வந்துள்ளார்.
இங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 925 ஆகும்.
இதன் மூலம் அங்கு மொத்தம் 6 லட்சத்து 14 ஆயிரத்து 941 பேருக்கு தொற்று இருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது. இதன்மூலம் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையில் இந்த நாடு, அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பலன் அளிக்காமல் 1,437 பேர் மரணம் அடைந்தனர். இதன் மூலம் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 21 ஆக உயர்ந்துள்ளது.
உயிர்ப்பலியில் இத்தாலியை (33 ஆயிரத்து 689) பிரேசில் பின்னுக்கு தள்ளி விட்டது. இதன்காரணமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தொடர்ந்து 3-வது இடத்துக்கு பிரேசில் முன்னேறி இருக்கிறது.
Related Tags :
Next Story