உளவு பார்த்ததாக ரஷ்யாவில் முன்னாள் அமெரிக்க கடற்படை வீரருக்கு 16 ஆண்டுகள் சிறை


உளவு பார்த்ததாக ரஷ்யாவில் முன்னாள் அமெரிக்க கடற்படை வீரருக்கு 16 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 15 Jun 2020 4:16 PM IST (Updated: 15 Jun 2020 4:16 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான பால் வீலன் உளவு குற்றச்சாட்டில் ரஷ்ய நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்கோ

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அயர்லாந்து பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் வீலன், ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு படையினரால் 2018 டிசம்பர் 28 அன்று மாஸ்கோ ஓட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். 50 வயதான பால் வீலன் இரகசிய தகவல்களைக் கொண்ட கணினி ஃபிளாஷ் டிரைவோடு பிடிபட்டதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டது.

குற்றவாளி அல்ல என்று வாதிட்ட வீலன், தான் ஒரு வலையில் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவும், ரஷ்யாவில் அறிமுகமான ஒருவர் அவருக்கு வழங்கிய ஃபிளாஷ் டிரைவ்-ல் விடுமுறை புகைப்படங்கள் இருப்பதாக தான் கருதுவதாகவும் கூறினார்.

தற்போது இந்த வழக்கில் முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான பால் வீலன் உளவு குற்றச்சாட்டில் ரஷ்ய நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 More update

Next Story