இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை


இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை
x
தினத்தந்தி 20 Jun 2020 10:31 AM GMT (Updated: 20 Jun 2020 10:31 AM GMT)

இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பீஜிங்

ஒரே தாயிடம் உருவான இரட்டையர்களில் ஒரு குழந்தைக்கு அடுத்த குழந்தைக்கும் மிஞ்சிப்போனால் சில நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் ஒரே கருவில் உருவான ஒரு குழந்தை பிறந்து பத்தாண்டுகள் கழித்து அடுத்த குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளதுஏர்ந்தவர் 

சீனாவை சேர்ந்த பெண்மணி வாங் (41) இயற்கையாக குழந்தை உருவாகாததால், சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.அதன்படி, 2010ஆம் ஆண்டு லூ லூ என்ற செல்லப்பெயர் கொண்ட ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.

பின்னர் பத்தாண்டுகள் கழித்து லூ லூவுக்கு ஒரு தம்பியோ தங்கையோ வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் வாங். 
ஆகவே, மீண்டும் லூ லூ பிறந்த அதே மருத்துவமனைக்கு தம்பதியர் செல்ல, அங்கு அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, லூ லூ உருவான அதே நேரத்தில், அதே உயிரணுக்களை இணைத்து மேலும் சில கருமுட்டைகளை உருவாக்கி சேமித்து வைத்திருக்கிறார்கள் அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள்.தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டதும், அதே கருமுட்டைகளிலிருந்து இன்னொன்றை எடுத்து அதை வாங்கின் கருப்பையில் பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

தற்போது, கடந்த செவ்வாயன்று அதே மருத்துவமனையில் இன்னொரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் வாங்.அந்த குழந்தைக்கு தோங் தோங், என்று பெயர் வைத்துள்ளார்கள் அதன் பெற்றோர், அதன் பொருள்  சேம் சேம் அதாவது இரண்டாவது குழந்தை முதல் குழந்தையை போலவே இருக்கிறான் என்று பொருள்.

உண்மையில் லூ லூவும் - தோங் தோங்கும்  பத்தாண்டுகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள் என்கிறார்கள் அந்த மருத்துவமனை மருத்துவர்கள்.கொரோனா தொற்றுநோயின் புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் - உலக சுகதார அமைப்பு

கொரோனா தொற்றுநோயின் புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story