மனைவியை ஆபாசமாக சித்தரிக்கும் விளம்பரங்கள் தென் கொரியா மீது வடகொரியா தலைவர் கடும் கோபம் + "||" + Defectors sent 'offensive' images of North Korea first lady, envoy says
மனைவியை ஆபாசமாக சித்தரிக்கும் விளம்பரங்கள் தென் கொரியா மீது வடகொரியா தலைவர் கடும் கோபம்
மனைவியை ஆபாசமாக சித்தரிக்கும் விளம்பரங்களால் தென் கொரியா மீது வடகொரியா தலைவர் கடும் கோபத்தில் உள்ளார்.
மாஸ்கோ
கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது. தற்போது மீண்டும் வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது
கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியா சென்ற வட கொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வட கொரிய அரசை விமர்சிப்பது போன்ற துண்டு பிரசுரங்களை ஹீலியம் பலூன்கள் மூலம் வட கொரியாவுக்கு பறக்கவிட்டனர்.நா
இதனால் வடகொரிய தலைவர் கோபத்தின் உச்சிக்கே சென்று தென் கொரியாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து எதிரி நாடாக அறிவித்தார்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜங், தென்கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்நாட்டுடனான உறவை மொத்தமாக துண்டிக்கும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் தென் கொரியா வடகொரிய தலைவரின் மனைவி குறித்து அவர்கள் ஆபாசமாக சித்தரித்து வருகின்றனர்.
இது குறித்து வட கொரியாவின் ரஷ்ய உயர்மட்ட தூதர், தென் கொரியா வடகொரியாவின் முதல் பெண்மணி ரி சோல் ஜுவை ஆபாசமாக சித்தரித்ததாக கூறி உள்ளார்
வட கொரியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் மாட் செகோரா கூறும் போது ஹீலியம் பலூன்களை ஏவும் தென் வடகொரியாவுக்கு வட கொரிய அரசு கடுமையாக பதிலளித்து வருவதால், அங்குள்ளவர்கள் வடகொரியாவின் முதல் பெண்மணியை ஆபாசமாக சித்தரித்து விளம்பரம் செய்கின்றனர்.
பலூன் விளம்பரங்களில் வட கொரியத் தலைவரின் மனைவிக்கு எதிரான மோசமான மற்றும் அவமதிக்கும் பிரச்சாரங்கள் அடங்கி உள்ளன. ஃபோட்டோஷாப்பைப் பயன்படுத்தி அநாகரீகமான முறையில் இந்த பிரச்சாரம் உருவாக்கப்பட்டது, இது வட கொரியத் தலைவர்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது என கூறினார்
தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப்பின் கூற்றுப்படி, மே 31 அன்று அனுப்பப்பட்ட வடகொரிய தலைவர் மனைவியின் ஆபாச டிவிடிகள் இருந்தன, அதில் "தி லவ் ஆஃப் சோல் ஜூ" என்ற தலைப்பு இருந்தது.அதில் மார்பிங் செய்யபட்ட படங்கள் இருந்தன.