மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக உயர்வு


மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக உயர்வு
x
தினத்தந்தி 2 July 2020 8:37 PM IST (Updated: 2 July 2020 8:37 PM IST)
t-max-icont-min-icon

மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

மியான்மர்,

மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 

ஏற்கனவே கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 

இதில் சுமார் 50 தொழிலாளர்களின் பலியாகினர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 54 பேர்  காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

Next Story