அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை


அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 July 2020 12:17 PM IST (Updated: 7 July 2020 12:17 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிககை விடுத்து உள்ளனர்.

நியூயார்க்

மிக அரிய வகை மூளையைத் தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் புளோரிடா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நெக்லேரியா பவுலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபாவால் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏரியில் நீந்தும் போது மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழைந்துள்ளது இந்த மிக நுண்ணிய அமீபா இது ஒரு செல் மட்டுமே உடையது.

இந்த அமீபா மூளையில் தொற்றினை உண்டாக்கினால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பே அதிகம்.
இது வழக்கமாக காணப்படுவது குளிர்ந்து இல்லாத நன்னீரில். ஆனால், இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது.

இது அரிதாகவே தொற்றும் என்றாலும், இந்த அரிதான தொற்றுகளில் பெரும்பான்மை அமெரிக்க நாட்டின் தென் பகுதியில்தான் நிகழும். புளோரிடாவில் 1962ம் ஆண்டில் இருந்து 37 பேர் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமீபாவின் ஆபத்துகளை கருத்தில் கொண்டு, ஹில்ஸ்பாரோ கவுன்டி மக்களுக்கு ஃப்ளோரிடா மாகாண சுகாதாரத்துறை ஜூலை 3ம் தேதி அன்று எச்சரிக்கை விடுத்தது.

குழாய் தண்ணீர் அல்லது வேறு எந்த தண்ணீராக இருந்தாலும் மூக்கில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஹில்ஸ்பாரோ மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 2009 மற்றும் 2018ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 34 நான்கு பேர் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 பேருக்கு பொழுதுபோக்கு நீர்நிலைகளில் இருந்தே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

Next Story