உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியாக அதிகரிப்பு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,
கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்காவே கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அங்கு நாளொன்றுக்கு சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பிலும் அமெரிக்காவே முதலிடம் வகிக்கிறது.
கொரோனா வைரஸ் பற்றிய உலகளாவிய தரவுகளை வெளியிடும் வேர்ல்டோமீட்டர்ஸ் தகவலின் படி, இன்று காலை நிலரவப்படி அமெரிக்காவில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,158,731 ஆக உள்ளது. புதிதாக அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 61,647- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் சுமார் 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் 2 ஆம் இடத்தில் பிரேசிலும் (1,716,196 ) இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,55,402 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 551,183 ஆக உள்ளது. கொரோனா தொற்ற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 7,025,062- இருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

Related Tags :
Next Story