அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் மரணம்
அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் மரணம் அடைந்தார் என நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்
ஐவரி கோஸ்ட்
ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி இறந்துவிட்டார் என்று நாட்டின் ஜனாதிபதி அறிவித்தார்.
ஜனாதிபதி அலசேன் ஓட்டாரா வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூலிபாலியின் மரணம் குறித்து நாடு துக்கத்தில் உள்ளது, ஜனாதிபதி மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். 30 ஆண்டு காலம் தனக்கு நெருங்கிய ஒத்துழைப்பாளராக அவர் இருந்தார்
"தாயகத்தின் மீது மிகுந்த விசுவாசம், பக்தி மற்றும் அன்பு கொண்டவர். அவர் ஐவோரியன் தலைவர்களில் மிகுந்த திறமையும், தேசத்திற்கு மிகுந்த விசுவாசமும் கொண்டவர்" என்று கூறினார்.
61 வயதான கூலிபாலி இந்த ஆண்டு அக்டோபர் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அவர் சமீபத்தில் பிரான்சில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து திரும்பி வந்தார், அங்கு அவர் சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார். சமீபத்தில் தான் நாடு திரும்பினார்.
Related Tags :
Next Story