ஐ.நா.சபை பொருளாதார கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை உரை


ஐ.நா.சபை பொருளாதார கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை உரை
x
தினத்தந்தி 16 July 2020 9:14 PM IST (Updated: 16 July 2020 9:14 PM IST)
t-max-icont-min-icon

நியூயார்க் நகரில் இருந்து செயல்படும் ஐ.நா. சபை பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.


நியூயார்க் நகரில் இருந்து செயல்படும் ஐ.நா. சபை பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். காணொலி காட்சி மூலம், நாளை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை உரையாற்றுகிறார். கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியில் நார்வே பிரதமர் மற்றும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருடன் இணைந்து மோடி  கலந்துரையாடுகிறார்.

ஆண்டுதோறும் இந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் அரசு, தனியார் துறை, பொதுச்சமூகம் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் நிலையில், இந்த ஆண்டு காணொலி மூலம் நடைபெறுகிறது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வான பின்னர், முதல்முறையாக பிரதமர் உரை நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story