அடுக்கடுக்கான குற்றச்சாட்டு இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் ரஷ்யா எச்சரிக்கை


அடுக்கடுக்கான குற்றச்சாட்டு இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் ரஷ்யா எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 July 2020 7:17 AM IST (Updated: 17 July 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு மருந்து தகவல் திருட்டு குற்றச்சாட்டு இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்து உள்ளது


மாஸ்கோ

இங்கிலாந்து கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக அந்நாட்டு அறிவித்து இருந்தது.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்படும்  கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துதான் முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது 

இந்நிலையில், ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றச்சாட்டியுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து பொதுத்தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து - அமெரிக்கா இடையேயான ரகசிய வியாபார தகவல்களை திருடி இணைய தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை ரஷியா செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தலில் தலையீடு, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி தகவல் திருட முயற்சி என இங்கிலாந்து தெரிவித்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது எனவும், நட்பற்ற செயல்பாடுகளை ரஷ்யா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது எனவும், தகுந்த பதிலடி தருவதே வழக்கம் எனவும் ரஷியா மிரட்டல் விடுத்து உள்ளது.

Next Story