நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 28 Nov 2021 3:37 PM IST (Updated: 28 Nov 2021 3:37 PM IST)
t-max-icont-min-icon

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி கனமழை பெய்தது. இதனால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக கடலோர மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. அந்த வகையில், கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து,  அந்தந்த மாவட்ட  கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
1 More update

Next Story