85-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 Jan 2022 2:03 AM GMT (Updated: 30 Jan 2022 2:05 AM GMT)

மனதின் குரல் என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
 
அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இது 85-வது  மன் கி பாத் நிகழ்ச்சியாகும்.
 
இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, கொரோனா தடுப்பூசிகள் குறித்தும் பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story