2030-ம் ஆண்டில் இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்


2030-ம் ஆண்டில் இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்
x

கோப்புப்படம் AFP

2030-ம் ஆண்டில் இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்.எஸ்.பி.சி வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லண்டன்,

2030-ம் ஆண்டில் ரூ.8 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்.எஸ்.பி.சி வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 10 லட்சம் டாலர்கள் அளவுக்கு சொத்து மதிப்பு கொண்டவர்கள் மில்லியனர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.8 கோடியாக உள்ளது.

2030-ல் இந்தியாவில் உள்ள மில்லியனர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக மக்கள் தொகையில் ஒரு சதவீதமாக இருக்கும் என்று எச்.எஸ்.பி.சி கணித்துள்ளது. சீனாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை 2030-ல் 5 கோடியாக மக்கள் தொகையில் 4 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசிபிக் நாடுகளில் மில்லியனர்களின் விகிதத்தில் ஆஸ்திரேலியா தற்போது முதலிடத்தில் உள்ளது. 2030-ல் சிங்கப்பூர் முதலிடத்திலும் ஆஸ்திரேலியா 2-வது இடத்திற்கும் ஹாங்காக் 3-வது இடத்திற்கும் தைவான் 4-வது இடத்திற்கும் மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


Next Story