ஜெர்மனி அருகே 2 சரக்கு கப்பல்கள் நடுக்கடலில் மோதல்!

Image Courtesy : AFP
நடுக்கடலில் 2 சரக்கு கப்பல்கள் மோதியதில் ஜெர்மனியைச் சேர்ந்த கப்பல் சேதம் அடைந்து கடலில் மூழ்கியது.
பெர்லின்,
ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து நாட்டின் இம்மிங்ஹாம் துறைமுகம் நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. வெரிட்டி என்ற பெயருடைய இந்த கப்பல் சுமார் 300 அடி நீளமுடையது ஆகும். ஜெர்மனிக்கு சொந்தமான ஹெல்கோலாண்ட் தீவு அருகே சென்றபோது எதிரே மற்றொரு கப்பலும் வந்தது. ஸ்பெயின் நோக்கி சென்ற அந்த கப்பல் திடீரென ஜெர்மனி கப்பல் மீது மோதியது.
இதனையடுத்து கடலோர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் இந்த விபத்தில் ஜெர்மனியின் கப்பல் சேதம் அடைந்து கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த பலர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






