அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி


அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
x

அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிறிஸ்தவ புனிதர்களை நினைவுகூறும் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினர் அனைவரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் போலீசார் வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story